in

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா 

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா 

பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் முதல் முறை பானை உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாவட்ட கலெக்டர்

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. அனைத்து துறை அரசு அலுவலர்கள் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பொங்கல் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார்

தொடர்ந்து பானை உடைத்தல், உறி அடித்தல், குண்டு எறிதல், சுருள்வால் சுற்றுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது இதில் அரசு அலுவலர்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்

தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சட்டையில் வந்த மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் பானை அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தார்

பல்வேறு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதிலும் முதல் முறையாக பானை உடைத்தல் போட்டியில் கலந்து கொண்டு பானை உடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது என மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தனது மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.

What do you think?

தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா கோலாகலம்

கோயம்பேட்டில் பேருந்தின் மீது ஏறி கல்லூரி மாணவர்கள் அட்டூழியம்