சுதா கொங்கரா இயக்கத்துல வெளியான ‘பராசக்தி’ படத்துக்கு மிக்ஸட் ரிவியூஸ்
சுதா கொங்கரா இயக்கத்துல வெளியான ‘பராசக்தி’ படத்துக்கு இப்போ மிக்ஸட் ரிவியூஸ் வந்துட்டு இருக்கு.
இந்த நேரத்துல படத்தோட கிரியேட்டிவ் புரொடியூசர் தேவ் ராம்நாத் கிளப்பிவிட்ட ஒரு விஷயம் இப்போ பெரிய சர்ச்சையாகிடுச்சு.தேவ் ராம்நாத் ரொம்ப ஆதங்கமா சில விஷயங்களைச் சொல்லிருக்காரு: ரேட்டிங்ல கை வைக்கிறாங்க:
“விஜய் ரசிகர்கள் வேணும்னே எங்களை டார்கெட் பண்றாங்க. புக் மை ஷோ (BookMyShow) ரேட்டிங்கைக் குறைக்கிறதே அவங்கதான்.” “தியேட்டருக்குள்ள போயி அரசியல் கோஷங்களைப் போட்டு ஆடியன்ஸை கடுப்பேத்துறாங்க.
சோஷியல் மீடியா முழுக்க நெகட்டிவ் கமெண்ட்ஸை பரப்பி முட்டுக்கட்டை போடுறாங்க”னு சொல்லிருக்காரு.இதைப்பார்த்து சும்மா இருப்பாங்களா தளபதி ரசிகர்கள்? அவங்க அடுக்கடுக்கான பதிலடிகளைத் திருப்பிப் போட்டிருக்காங்க:
“எங்க தலைவரோட ‘ஜனநாயகன்’ படத்தை முடக்க நீங்கதானே பல வேலைகளைப் பார்த்தீங்க? திடீர்னு ரிலீஸ் தேதியை மாத்துனது, ‘மங்காத்தா’ ரீரிலீஸ் பண்ணி தியேட்டர்களை பிளாக் பண்ணப் பார்த்தது எல்லாம் யாரு?”னு கேக்குறாங்க.
“படம் நல்லா இருந்தா யாரு நினைச்சாலும் தடுக்க முடியாது. உங்க படத்துல இருக்குற வசனங்களும் கதையும் சரியில்லைன்னா அதுக்கு நாங்க எப்படிப் பொறுப்பாக முடியும்? உங்க தோல்விக்கு எங்களைப் பழி போடாதீங்க”னு ஆக்ரோஷமா கமெண்ட் பண்ணிட்டு வர்றாங்க.
மொத்தத்துல, ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போன கடுப்புல இருக்குற விஜய் ரசிகர்களுக்கும், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் ஆகலையோங்கிற பயத்துல இருக்குற ‘பராசக்தி’ டீமுக்கும் இடையில இப்போ வார்த்தைப் போர் உச்சக்கட்டத்துல இருக்கு.


