‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ இரண்டில் யார் முந்துவது?
அந்தக் காலத்துல எல்லாம் தீபாவளி, பொங்கல் வந்தாதான் தியேட்டர் பக்கம் கூட்டமே வரும்.
எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் னு பெரிய தலைங்க படங்கள் பண்டிகை அன்னைக்கு மோதும்போது ஊரே திருவிழா கோலம் பூணும். ஆனா இப்போ வருஷம் முழுக்க படங்கள் வந்தாலும், பழைய மாதிரி தியேட்டர்ல கூட்டம் இருக்க மாட்டேங்குது.
போன 2025-ல வந்த நூத்துக்கணக்கான படங்கள்ல வெறும் 30 படங்கள் தான் தேறுச்சுன்னா பாருங்களேன்!
அரசியலுக்குப் போகப்போற தளபதி விஜய்க்கு இதுதான் கடைசிப் படம். அதனாலயே ‘ஜனநாயகன்’ மேல எதிர்பார்ப்பு விண்ணைத் தொடுது.
இது தெலுங்குல ஹிட் அடிச்ச ‘பகவந்த் கேசரி’யோட ரீமேக்னு ஒரு பேச்சு ஓடுனாலும், எச். வினோத் இயக்கத்துல விஜய் ஒரு படம் பண்றாருன்னா அதுல கண்டிப்பா ஏதாவது ஒரு ‘ஸ்பெஷல்’ மேட்டர் இருக்கும்னு ரசிகர்கள் நம்புறாங்க.
இன்னொரு பக்கம் நம்ம SK-வோட ‘பராசக்தி’. இதுல சிவகார்த்திகேயன் மட்டும் இல்லாம, ஜெயம் ரவி மற்றும் அதர்வாவும் இருக்காங்க.
இது 1965-ல நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமா வச்சு எடுக்கப்பட்ட பீரியட் ஃபிலிம்.
‘வின்டேஜ்’ லுக்ல ஹீரோக்களைப் பாக்க ரசிகர்கள் செம ஆர்வமா இருக்காங்க.
ரெண்டு படமுமே வெயிட்டான படங்கள் தான். இருந்தாலும், தளபதிக்கு இது கடைசிப் படம் அப்படிங்கிற எமோஷன் இருக்கறதுனால, இப்போதைக்கு ரசிகர்கள் மத்தியில ‘ஜனநாயகன்’ தான் கொஞ்சம் முன்னணியில இருக்கு.
சிவகார்த்திகேயனோட ‘பராசக்தி’ மெசேஜ் சொல்லும் படமா இருந்தாலும், தளபதியோட ஆக்ஷன் வேகம் தியேட்டர்களை ஆக்கிரமிக்கும்னு எதிர்பார்க்கப்படுது.
‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ இரண்டில் யார் முந்துவது? என்று பார்த்தால், இளைய தளபதிக்கே ரசிகர்கள் மத்தியில் வேகம் இருப்பது தெரிகிறது.


