in

ஸ்டிரேஞ்சர் திங்ஸ்’ கிளைமாக்ஸ் ரிலீஸ்! திடீரென முடங்கிப் போன Netflix !! பல கோடி! செலவில் 5-வது சீசன்


Watch – YouTube Click

ஸ்டிரேஞ்சர் திங்ஸ்’ கிளைமாக்ஸ் ரிலீஸ்! திடீரென முடங்கிப் போன Netflix !! பல கோடி! செலவில் 5-வது சீசன்

 

உலகம் முழுக்க கோடி கணக்கான ரசிகர்களை வச்சிருக்கிற ஒரு வெப் தொடர்னா அது கண்டிப்பா ‘ஸ்டிரேஞ்சர் திங்ஸ்’ தான்.

2016-ல ஆரம்பிச்ச இந்த மிரட்டலான பயணம், இப்போ அதோட கடைசி சீசனை (Season 5) எட்டிடுச்சு. ஆனா நேத்து நடந்த விஷயம் தான் இப்போ சோஷியல் மீடியால ஹாட் டாபிக்!

இந்தக் கடைசி சீசனோட கிளைமாக்ஸ் எபிசோட் (8-வது எபிசோட்) மேல பயங்கர எதிர்பார்ப்பு இருந்துச்சு.

நேத்து நைட் இந்த எபிசோட் ரிலீஸ் ஆன அடுத்த செகண்ட், உலகம் முழுக்க இருக்குற ரசிகர்கள் ஒரே நேரத்துல நெட்பிளிக்ஸ் ஆப்புக்குள்ள புகுந்திருக்காங்க.

அந்த கூட்ட நெரிசலைத் தாங்க முடியாம நெட்பிளிக்ஸ் தளமே கொஞ்ச நேரம் ஹேங் ஆகி முடங்கிடுச்சு!

அப்புறம் என்ன… டெக்னிக்கல் டீம் உடனே களத்துல இறங்கி சரி பண்ணதுக்கு அப்புறம் தான் ரசிகர்கள் நிம்மதியா பார்க்க முடிஞ்சது.சும்மா சொல்லக்கூடாது, இந்தக் கடைசி சீசனை மட்டும் எடுக்க நெட்பிளிக்ஸ் எவ்வளவு செலவு பண்ணிருக்காங்க தெரியுமா? கிட்டத்தட்ட 3,300 கோடி ரூபாய்!

ஒரு சீசனுக்கே இவ்வளவு பட்ஜெட்னா, அந்தத் தொடரோட பிரம்மாண்டத்தை நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க.இதுவரைக்கும் 4 சீசன் முடிஞ்சு, 5-வது சீசன் ரெண்டு பாகமா ரிலீஸ் ஆச்சு.

நவம்பர்ல வந்த எபிசோட்கள் செம ஹிட். இப்போ வந்திருக்கிற இந்த 8-வது எபிசோடோட இந்தத் தொடர் ஒரு முடிவுக்கு வருது.

அந்த ஹாக்கின்ஸ் (Hawkins) பசங்க, அப்சைடு டவுன் (Upside Down) உலகம்னு இத்தனை வருஷமா நம்மளை மிரட்டுன ‘ஸ்டிரேஞ்சர் திங்ஸ்’ இப்போ ஒரு வழியா முடிஞ்சிருச்சு.


Watch – YouTube Click Shorts

What do you think?

Mobile Betting in Zambia: A Comprehensive Guide

இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்! முடிந்தது ராணுவ பயிற்சி.. BTS டீம் இப்போ ஒண்ணா சேர்ந்தாச்சு!