கர்நாடக இசைக்கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கைக் கதை (பயோபிக்) படம்
இப்போல்லாம் கிரிக்கெட் வீரருங்க, சினிமா ஸ்டாருங்க, அரசியல் தலைவங்கன்னு பிரபலங்களோட வாழ்க்கைக் கதையை (பயோபிக்) படமா எடுக்குறது ரொம்ப ட்ரெண்டா இருக்கு.
எம்.எஸ். தோனி, நடிகை சாவித்திரியின் மகாநடிகை, ‘சூரரைப் போற்று’, *’தலைவி’*ன்னு நிறையப் பேரோட வாழ்க்கை வரலாறுப் படங்கள் இந்திய சினிமாவுல வந்திருக்கு.
இந்த வரிசையில, இப்போ கர்நாடக இசைக்கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவோட வாழ்க்கையைக் கதைப் படமா எடுக்குற வேலைகள் ஆரம்பிச்சிருக்காம்னு தெலுங்கு சினிமா வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க.
அதுல, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா கேரக்டர்ல (கதாபாத்திரம்) நடிக்கிறதுக்கு, நம்ம நடிகை சாய் பல்லவிகிட்ட பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கிறதாவும் தகவல் சொல்லுது!
இதுபத்தி அதிகாரப்பூர்வமான தகவல் சீக்கிரமே வரும்னு எதிர்பார்க்கப்படுது..


