in

திருவண்ணாமலை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்…..

திருவண்ணாமலை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்…..

சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…..

போக்குவரத்து சிக்னல் வேலை செய்யாததால் வாகன ஓட்டிகள் அவதி…..

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

இதனால் திருவண்ணாமலை நகரில் அனுதினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மத்திய பேருந்து நிலையம் அருகே நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.

குறிப்பாக போக்குவரத்து சிக்னல் வேலை செய்யாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லும் பேருந்துகள் வழியிலேயே பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதாலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் ஓரமாக செல்லாமல் சாலையில் செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கிரிவலம் செல்லும் பக்தர்கள் மற்றும் சாலையில் செல்லும் பொதுமக்களை நெறிமுறை படுத்தி போக்குவரத்து சிக்னலை சீர் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

தஞ்சை மத்திய மாவட்ட திமுக சார்பில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி”

‘வா வாத்தியார்’ படத்தை ரிலீஸ் பண்ண தடை விதிச்சு (Stop) ஆர்டர் போட்டாங்க