in

பழனி திரு ஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் பணிகள் நிறைவு 

பழனி திரு ஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் பணிகள் நிறைவு 

 

பழனி மூன்றாம் படை வீடான திரு ஆவினன்குடி கோவிலில் 8ம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்காக தற்போது பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களை யாகசாலையில் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திரு ஆவினன்குடி கோவிலில் கடந்த 2014 ம் ஆண்டு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேக பணிகளுக்கான சில மாதங்களுக்கு முன்பு பணிகள் துவங்கியது.

தற்போது பணிகள் நிறைவு பெற்று வருகின்ற எட்டாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதனையொட்டி திரு ஆவினன்குடி கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு யாகசாலைகள் அமைக்கப்பட்டு நேற்று பூர்வாங்க பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றது.

அதனை தொடர்ந்து இன்று காலை காசி, கங்கை உள்ளிட்ட பல்வேறு புனித நதிகளில் இருந்து புண்ணிய தீர்த்தங்களை கலசங்களாக கொண்டுவரப்பட்டு பழனி கோவிலில் வைக்கப்பட்டு தற்போது யாகசாலையில் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் கால யாக பூஜை துவங்க உள்ளது. நாளை 6 ம் தேதி இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளது.

இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் எட்டாம் தேதி வருகையை அடுத்து பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பணிகளை பழனி கோவில் அறங்காவலர் குழு மற்றும் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

What do you think?

அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் 14 கிலோமீட்டர் கிரிவலம்

Ruletka aplikacja darmowe spiny – wszystko, co musisz wiedzieć!