in

“கவர்ச்சி “அது கதைக்கு அவசியம்னா, ரசிக்கிற மாதிரி நடிப்பேன் – நடிகை தேஜு அஸ்வினி


Watch – YouTube Click

“கவர்ச்சி “அது கதைக்கு அவசியம்னா, ரசிக்கிற மாதிரி நடிப்பேன் – நடிகை தேஜு அஸ்வினி

 

நடிகை தேஜு அஸ்வினி, ‘என்ன சொல்லப் போகிறாய்’ படம் மூலமாத்தான் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினா வந்தாங்க.

சமூக வலைதளங்கள்ல ரொம்ப ஆக்டிவா இருக்கிற இவங்க, தன்னோட சினிமா பயணம் பத்தி மனசு திறந்து பேசியிருக்காங்க.

“நான் சினிமாவுக்குள்ள வந்ததுங்கிறது எதிர்பாராம நடந்த விஷயம் தான். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு பிரைவேட் கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தேன்.”

“என் ஃபிரண்ட்ஸ் எடுத்த ஒரு ஷார்ட் ஃபிலிம்ல நடிச்சேன். என் நடிப்பைப் பார்த்துட்டு, அப்புறம் நிறைய குறும்படங்கள்ல வாய்ப்பு வந்துச்சு. அப்படியே மாடலிங் ஃபீல்டுக்கு வந்தேன்.

நாளாக நாளாக, சினிமா மேல ரொம்ப ஆசை வந்துருச்சு. அதனால, வேலையை விட்டுட்டு, சினிமாவுல இறங்கிட்டேன். “”என் வாழ்க்கையில மறக்க முடியாத படம்ன்னா அது ‘பிளாக்மெயில்’ படம்தான்.

அந்தப் படத்துல ஜி.வி.பிரகாஷ் சார்தான் என்னைப் பரிந்துரை செஞ்சதா ஃபிரண்ட்ஸ் மூலமா தெரிஞ்சேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இது ஒரு அட்டகாசமான, எல்லா ஃபீலிங்ஸும் (எமோஷன்களும்) கலந்த படம்.

“”நான் ரொம்ப ஜாலியான ஆள். துறுதுறுன்னு இருப்பேன். சும்மா இருக்கவே பிடிக்காது. படிக்கிற காலத்துல விளையாட்டுலயும் நல்லா இருந்தேன். எங்க அப்பா-அம்மா ரொம்ப கண்டிப்பானவங்க. அதனால படிப்பு மட்டும்தான் வாழ்க்கையா இருந்துச்சு. அதனாலதான் காதலுக்கு வாய்ப்பே இல்லாம போச்சு.

“”டைரக்டர் கவுதம் மேனன் படங்கள்ல நடிக்கிறதுக்கு ஆசைப்படுறேன். அதே மாதிரி, ‘ஃபேமிலிமேன்’ சீரிஸ்ல வர்ற சமந்தா மாதிரி ஆக்‌ஷன் கேரக்டர்கள்ல நடிக்கவும் ஆசைப்படுறேன்.”

“கவர்ச்சி பத்தி கேட்டா, அது கதைக்கு அவசியம்னா, ரசிக்கிற மாதிரி மட்டும்தான் நடிப்பேன். அதுல நான் ரொம்ப உறுதியா இருக்கேன்,”னு சொல்லியிருக்காங்க.

What do you think?

தஞ்சை பெரிய கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது

பெங்களூரு பப்பில் சர்ச்சைக்குரிய சைகை காட்டிய ஆர்யன் கான்