விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய நிலங்கள் அருகே ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாய நிலங்கள் அருகே ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி இந்த பகுதியில் யானைகள் தொடர்ச்சியாக முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் உத்தரவின் பெயரில் ரேஞ்சர் செல்லமணி தலைமையில் வனத்துறையினரும் தொடர்ச்சியாக யானைகளை விரட்டி வருகின்றனர்.
இருந்தாலும் அவ்வப்போது வனத்துறையினருக்கு தெரியாமல் மாற்றுப் பாதை வழியாக ஒற்றை யானை விவசாய நிலங்களுக்குள் பகல் நேரத்திலும் நுழைந்து சேதபடுத்தி வருகிறது.
அந்த வகையில் ஒற்றை யானை ஒன்று செண்பகத் தோப்பு பகுதியில் இருந்து திருவண்ணாமலை பந்தப்பாறை பகுதியில் பகல் நேரத்திலேயே முகாமிட்டுள்ளது.

இதனால் திருவண்ணாமலை பந்தப்பாறை பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய நிலங்களுக்குள் செல்ல அச்சமடைந்துள்ளனர்.
நிரந்தரமாக யானையை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


