ஐஸ் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்று அசத்தல்
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் 10 மற்றும் 14 வயதுக்குபட்ட போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்று அசத்தல்.
வெற்றி பெற்று ஊர் திரும்பிய மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விஷ்ணுவர்தன். பரீட்சத் பிரணவ்.கார்த்திக் நேதன் மற்றும் லோகேஷ் நடராஜ் முகமது அனாஸ் ..உள்ளிட்ட மாணவர்கள் மாணவர்கள் ..பயிற்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேசிய அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
இதில் பத்து 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் தமிழக அணி முதல் இடத்தையும் 14 வயதுக்குட்பட்ட ..மாணவர்களுக்கான போட்டியில் தமிழக அணி இரண்டாம் எடுத்ததையும் பெற்றது.

இந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று சொந்த ஊரான பட்டுக்கோட்டை பகுதிக்கு வருகை தந்த பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பித்தனர்.


