ஏழை எளிய மக்களுக்கு மதியம் உணவு வழங்கும் இடத்தில் பந்தல் அகற்றம்
கும்பகோணத்தில் ஏழை எளிய மக்களுக்கு மதியம் உணவு வழங்குவதற்காக மாநகராட்சி சொந்தமான இடத்தில் பந்தல் போடப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினார்கள். திமுக வேண்டுமென்று இந்த வேலையை செய்கிறது என்று தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணீர் மல்க பேட்டி.
கும்பகோணத்தில் தாராசுரம் கோ சி மணி நகரை சேர்ந்த ஜெபஸ்டின் நாதன், இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி தமிழக வெற்றி கழகம் கட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
இவர் குப்பங்குளம் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர் அங்குள்ள ஏழை எளிய பொது மக்களுக்கு தவெக சார்பில் விலையில்லா உணவகம் (அன்னதானம்) வழங்குவதற்காக அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டு நாளை முதல் 200 பேருக்கு அன்னதானம் வழங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் நாச்சியார் கோவில் காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் செய்திருந்த பந்தலை மற்றும் பிளக்ஸ் பேனரை மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றி சென்றதால் பரபரப்பு நிலவியது.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரஸ்வதி தெரிவித்த போது நான் தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளேன் ஏழை எளிய பொதுமக்களுக்கு உணவுகள் வழங்குவதற்காக இந்த பந்தல் அமைக்கப்பட்டது.

தவெக கட்சி வளரக்கூடாது என்பதற்காக சுற்றியுள்ள திமுக நிர்வாகிகள் மாநகராட்சி மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளனர்.
இந்த இடம் நீண்ட நாட்களாக எந்த பயன்பாடும் இல்லாமல் உள்ளது பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்கு தான் இந்த பந்தல் அமைக்கப்பட்டது. என்று கண்ணீருடன் பேட்டி அளித்தார்.


