in

ஆஞ்சநேயர் கோயிலில் அன்புமணி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

ஆஞ்சநேயர் கோயிலில் அன்புமணி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டாக்டர் ராமதாஸ் இல்லம் அருகே உள்ள பாமக தலைவர் அன்புமணிக்கு பிடித்த ஆஞ்சநேயர் கோயிலில் அன்புமணி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மகப்பேர் மருத்துவப் பயனாளிகளுக்கு பழங்கள் பிஸ்கட் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பாமகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டாக்டர் ராமதாஸ் இல்லம் அருகே டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு பிடித்த கோவில் ஆன ஆஞ்சநேயர் கோவிலில் மாநில இளைஞர் சங்கத் துணை செயலாளர் ராஜேஷ் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி, நிர்வாகிகள் சஞ்சய்ப்பா, ரவி, முத்துக்குமரன் ஆகியோர் ஏற்பாட்டில் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் மகப்பேர் மருத்துவ பயனாளிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள் பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டது.

இதில் பாமக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

இரட்டணை அருள்மிகு ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய ஊஞ்சல் உற்சவம்

மாநில அளவிலான கைப்பந்து போட்டி