ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் அவர்களின் அவதாரத் திருநாள் விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் – செத்தவரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சிவஜோதி மோனசித்தர் ஆசிரமத்தில் சிவஜோதி மோன சித்தர் அவர்களின் அவதார வெகு விமர்சியாக நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு மங்கல இசை உடன் தொடங்கிய விழா காலை 5 மணிக்கு கோபூஜையும் காலை 8 மணிக்கு சிறப்பு பூஜையும் 9 மணி அளவில் 108 வேள்வி ஆராதனையும் 10 மணிக்கு கலச பூஜையும் காலை 11 மணிக்கு மகேஸ்வர பூஜையும் அதனைத் தொடர்ந்து மதியம் 11:30 மணி அளவில் மலர் பூஜையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நாள் முழுவதும் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் அவர்களின் அவதார திருநாளில் விழுப்புரம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி கடலூர் பாண்டி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு குருவருள் பெற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சித்திரை அவர்கள் இனிப்புகள் வழங்கி அருள் ஆசி வழங்கினார்..


