நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
நெய்வேலி என்எல்சியில், உள்ள சூரிய மின்சக்தியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில், உள்ள சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் சோலார் plant -ல் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிந்து வருகின்றனர்.
அவ்வாறு பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 26 நாட்கள் பணி வழங்க வேண்டும், பாதுகாப்பு சாதனம் வழங்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்பதாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒன்பதாவது நாள் போராட்டமாக, என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கஞ்சி காசும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டத்தில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர்.


