in

பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்

பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்

 

கடலூர் அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் நெய்வேலியில் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா பொது கூட்டம்…

கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் கடலூர் அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா பொது கூட்டம் நடைபெற்றது.

பிறந்தநாள் விழா பொதுகூட்டமானது கழக அமைப்பு செயலாளரும், கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசுகையில் ஆளும் திமுக அரசால் தமிழகத்தில் நிர்வாக சீர்கேடு ஏற்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பாலியல் பிரச்சனைகள் விலைவாசி உயர்வு, மின்சார கட்டண உயர்வு என என்னற்ற பிரச்சனைகள் இருப்பதாகவும் இதனால் மக்கள் பாதிகப்படுவதாகவும் அவர் பேசினார்,

மேலும் நெய்வலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இப்பகுதி மக்களை வஞ்சித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி சட்டமன்ற தொகுதி என இரண்டு தொகுதிகளையும் வென்று பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களை மீண்டும் தமிழக முதல்வராக்க பாடுபடுவோம் என பேசினார்.

இந்த விழாவில் மாநில அம்மா பேரவை செயலாளர் சிவசுப்பரமணியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் இராஜசேகர், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், நெய்வேலி அண்ணா தொழிற்சங்க செயலாளர் வெற்றிவேல், நகர செயலாளர் கோவிந்தராஜ், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இராதாகிருஷ்ணன், வடலூர் நகர செயலாளர் பாபு மற்றும் அதிமுக மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

இராஜகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் பிறப்பை முன்னிட்டு கோ பூஜை

நெற்பயிரியல் மோடி பெயரை வரைந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த விவசாயிகள்