நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக 555-வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சி
பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தொடங்கி வைத்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குருசாமி அவர்களின் ஏற்பாட்டில் தினமும் இடைவிடாமல் உணவு குடிநீர், பாட்டில், பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை 2000 க்கும் மேற்பட்டோருக்கு, 555-வது நாளாக உணவு வழங்கும் நிகழ்ச்சியை அறக்கட்டளை நிறுவனர் “ஸ்டார் குரு” மற்றும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் “மதுரை முத்து” ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அருகில் வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.


