in

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவில் 5ம் திருநாளான இன்று இரவு சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தாிசனம் செய்தனா்.

தமிழ் கடவுள் முருகன் கோயில் கொண்டுள்ள படைவீடுகள் ஆறினுள் இரண்டாவதாக பெருமை பெற்று விளங்குவது திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூா் ஆகும்.

ஆதிசங்கரா், அகத்தியா், அப்பா், அருணகிாிநாதா், குமரகுருபரா் ஆகியோா் அருள்பெற்ற தொண்மையான திருத்தலம்.

இங்கு ஆவணித் திருவிழா கடந்த 14ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாயிற்று. சுவாமி குமரவிடங்கப் பெருமான் வள்ளி,தெய்வானையுடன் தினமும் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி எட்டுத் திருவீதிகளில் உலா வந்து திருக்கோவில் நடைசோ்தல் நடைபெற்றது.

விழாவில் 5ம் திருநாளான இனறு இரவு மேலக்கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவிலில் சிறப்பு மிக்க குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. இதனையொட்டி முன்னதாக குமரவிடங்கபெருமான் மற்றும் வள்ளி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடா்ந்து சுவாமியும், அம்பாளும் தனித்தனியே தங்கமயில் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கோவில் பிரதான கதவு சாத்தப்பட்டது.

அதேநேரத்தில் எதிர்புரம் சுவாமி ஜெயந்திநாதர் கீழரதவீதி முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்ததும், எதிர் சேவைக்காக கதவு திறக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும், ஜெயந்திநாதருக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது.

அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி கோசம் முழங்கினர். தொடார்ந்து சுவாமி மற்றும் அம்பாள் தங்க மயில் வாகனத்தில் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி எட்டு திருவீதிகளில் உலா வந்தனர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10- திருநாள் தேரோட்டம் 23-ம் தேதி நடைபெறுகிறது.

What do you think?

சங்கரன்கோவில் நகராட்சி நகர் மன்ற தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றிய திமுக

ஸ்ரீ சக்தி ரதத்தில் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் வருகை நிகழ்வு