மதுரையில் தவெக இரண்டாவது மாநில மாநாடு
மதுரையில் நடைபெறவிருக்கும் தவெக இரண்டாவது மாநில மாநாடு திடலில் தலைவர் விஜய் கொடியேற்றி வைக்க உள்ள தமிழக வெற்றி கழகத்தின் 100 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கொடிக்கம்பம் நடுவதற்கான பணிகள் துவக்கம்.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி என்னும் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ள நிலையில்
மாநாடு முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் பணிகள் தீவிர படுத்தப்பட்டு முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் விக்கிரவாண்டி மாநாட்டில் அமைக்கப்பட்டது போல பிரம்மாண்ட கொடி கம்பம் ஒன்று மதுரை மாநாட்டிலும் அமைக்கப்பட உள்ளது அதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ளது.
தவெக கொடிக்கம்பம் 100 அடிக்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.
நடப்பட உள்ள கொடிக்கம்பத்தில் தவெக தலைவர் விஜய் தவெக கட்சியின் கொடியை ஏற்றி ஏற்றி வைத்து மாநாடை துவங்கி வைக்க உள்ளார்.
இந்த கொடிக்கம்பம் மாநாட்டு நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மாநாட்டின் முகப்பு ஆர்ச் முன்பாக அமைக்கப்பட்டு வருகிறது
ரோட்டில் இருந்து மாநாட்ட திடலுக்குள் நுழையும் நுழைவு வாயிலில் 100 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தவெக கொடிக்கம்பம் அமைக்கப்பட உள்ளது.
ஐந்து அடிக்கு தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் காங்கிரட் கலவைகள் போடப்பட உள்ளது, அதனைத் தொடர்ந்து தயார் செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட கொடிக்கம்பம் கொண்டுவரப்பட்டு நடப்பட உள்ளது. மாநாட்டிற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


