in

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவி

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவி

 

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற 3 பள்ளி மாணவிகளின் இருவர் உயிருடன் மீட்பு….

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவி கனிஷ்கா இறந்த நிலையில் மீட்பு…..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் உள்ள சருக்கை எடத்தெருவில் வசிப்பவர் அறிவழகன் இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள்கள் இவரது தாய் வீடான சறுக்கை எடத்தெருவில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக அறிவழகன் மகள்கள் கனிஷ்மா வயது- 14, இவர் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது தங்கை கேசவர்த்தினி வயது- 12 இவர் கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

மேலும் அதே தெருவில் வசிக்கும் விவசாயக் கூலி மதியழகன் மகள் சகானா வயது- 9 ,இவர் உமையாள்புரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்கள் மூன்று பேரும் கொள்ளிட ஆற்றில் குளித்த பொழுது திடீரென ஆற்றில் உள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

சத்தம் கேட்கவே இதை கண்ட கரையில் இருந்த பொதுமக்கள் கேசவர்த்தினி மற்றும் சகானா ஆகிய இருவரை உயிருடன் மீட்டனர்.

மேலும் கனிஷ்மா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இது குறித்து உடனடியாக பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கும், கபிஸ்தலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் பாபநாசம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளிட ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 9-ஆம் வகுப்பு மாணவியை தேடிய நிலையில் மாணவி கனிஷ்மா இறந்த நிலையில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளிட ஆற்றில் ஒன்பதாம் வகுப்பு மாணவி அடித்து செல்லப்பட்ட சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

பாபநாசத்தில் பரிதாபம்

அமைச்சர் முரசொலி மாறனின் 92 வது பிறந்தநாளையொட்டி தி.மு.க வினர் மலர்தூவி மரியாதை அஞ்சலி