in

நாமக்கல் மணப்பள்ளி சிவ ஆலயத்தில் தெய்வதிருக்கல்யாண வைபவ நிகழ்வு

நாமக்கல் மணப்பள்ளி சிவ ஆலயத்தில் தெய்வதிருக்கல்யாண வைபவ நிகழ்வு

 

நாமக்கல் மணப்பள்ளி சிவ ஆலயத்தில் தெய்வதிருக்கல்யாண வைபவ நிகழ்வு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு பிரகன் நாயகி உடனுறை பீமேஸ்வரர் ஆலயத்தில்இன்று தெய்வதிருக்கல்யாண வைபவ நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.முன்னதாக காலை 7 மணியளவில் கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமமும் பின்னர் விநாயகர் உற்சவ திரிபுர சுந்தரர், திரிபுர சுந்தரி அபிஷேகமும் காலை 9 மணி அளவில் ஸ்ரீதேவி பூதேவி உடனுறை வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து சீர் தட்டு எடுத்துவரும் நிகழ்வும் காலை 10:45 மணிக்கு மேல் 11 45 மணிக்குள் சிவாச்சாரியார்கள் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி முறையாக திருகல்யான வைபவ நிகழ்வுகளை மிக விமர்சியாக நடத்தினர்.

அப்போது கங்கணம் கட்டுதல் திருமாங்கல்ய தாரணம் அணிதல் மாலை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மிக விமர்சையாக நடைபெற்றது. அப்போது தெய்வ திருமணம் மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிவனடியார்கள் ஆன்மீக அன்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிறைவாக திரிபுர சுந்தரருக்கும் திரிபுர சுந்தரி தாயாருக்கும்பஞ்ச தீப உபசரிப்புகள் காண்பிக்கபட்ட பின் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது.

நிறைவில் மூலவர் பீமேஸ்வரை வழிபட்டு சென்றனர். இதில் இப்பகுதிபக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அப்போது சிவ அடியார்கள் கைலாய வாத்தியம் வாசித்தனர்.

பின்னர் விழா குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணப்பள்ளி பீமேஸ்வரர் உழவாரப் பணிக்குழு மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக செய்யப்பட்டது.

What do you think?

ஸ்ரீ ராமசுவாமி திருக்கோவிலில் ஸ்ரீ ராமசீதா திருக்கல்யாண மஹோத்ஸவம்

பாபநாசத்தில் பரிதாபம்