in

தேர்தல் ஆணையத்தை கண்டித்து சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

தேர்தல் ஆணையத்தை கண்டித்து சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

 

தேர்தல் ஆணையத்தை கண்டித்து சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி. முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்பு.

வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகள் குறித்து சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருந்தார். இதன் எதிரொலியாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரத்தில் இன்று தேர்தல் ஆணையத்தை கண்டித்து மெழுகுவத்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. சிதம்பரம் காமராஜர் சிலை அருகில் இருந்து துவங்கிய இந்த பேரணியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்று ஊர்வலமாக சென்றார்.

அவருடன் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைகளில் மெழுகுவத்தி ஏந்தி சென்றனர். அப்போது தேர்தல் ஆணையத்திற்கு எதிராக முழக்கமிட்டபடி காந்தி சிலை வரை ஊர்வலமாக சென்றனர்.

What do you think?

வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை அடியோடு நிறுத்த வேண்டும் வைகோ பேச்சு

செஞ்சி அரசு மருத்துவமனையில் வளைகாப்பு விழா