கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தின் இடைவேளையின் போது கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா திரைப்படம் என்பதால் ரசிகர்கள் பல்வேறு விதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை அமைந்துள்ள விஜயா திரையரங்கில், படத்தின் இடைவேளையின் பொழுது, ரசிகர்கள் கேக் வெட்டி தியேட்டர் ஊழியர்களுக்கு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ராஜேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


