ஆடி பதினெட்டாம் பெருக்கு புது தாலி மாத்திக்கொண்ட மணமக்கள்
ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலில் புது தாலி மாத்திக்கொண்ட மணமக்கள்
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கு முன்னிட்டு முருகனை தரிசிக்க நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.
ஆடி பதினெட்டாம் பெருக்கின் தாலி பெருக்கி கட்டினால் தாலி பாக்கியம் பெருகும் என்பது ஐதீகம்.
இதனால் இன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வந்த புது மண பெண்களுக்கு கோயில் வைத்து புதிய மஞ்சள் கயிறு வாங்கி அதில் மாங்கல்யம், குண்டு, காசு ஆகியவற்றை புது மஞ்சள் கயிற்றில் மாற்றி அந்த புதிய தாலியில் சந்தனம் குங்குமம் வைத்து மாப்பிள்ளை பொண்ணுக்கு புதிய தாலி கட்டினார்.

இதில் உறவினர்கள் கலந்து கொண்டு புது பொண்ணு மாப்பிள்ளை அர்ச்சனை தூவி ஆசீர்வாதம் செய்தனர்.


