in

தேர்தல் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் – மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி

தேர்தல் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் – மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி

 

1967 ல் முரண்பட்ட கட்சிகளை ஒன்று சேர்த்து அறிஞர் அண்ணா கூட்டணி அமைத்தார், அதேபோல தேர்தல் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை விளாங்குடியில் நடைபெற்ற விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் “ஓ.பன்னீர்செல்வம் எங்கள் கூட்டணியில் எங்கே இருந்தார், அவர் பாஜக உடன் இருந்தார்.

தேர்தல் கூட்டணி என்பது இறுதி கட்டத்தில் தான் முடிவாகும். சீட் பேரம் தொகுதி ஒதுக்கீடு என பல விஷயங்கள் தேர்தலில் உள்ளது. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி முடிவாகும். தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் அதிமுக, திமுக அதன் கூட்டணியை உறுதி செய்யும், வாக்குகள் சிதறாமல் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தல் கூட்டணி அமைக்கப்படுகிறது, .

அதிமுகவின் எழுச்சி பயணத்திற்கு மக்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள், 2026 ல் அதிமுக ஆட்சி அமைப்பது திண்ணமாக உள்ளது, அதிமுக பாஜகவோடு கூட்டணியில் இருக்கிறது, கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகளை அழைத்து வர பேசி வருகிறார்கள், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பது திண்ணம். எடப்பாடி பழனிச்சாமியிடம் இணக்கமாக போகிற கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன.

இன்னும் பல கட்சிகள் வரும். அதிமுக கூட்டணி பெரிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு, கூட்டணிக்கு பொருத்தமான கட்சிகளை எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார், 1967 ல் முரண்பட்ட கட்சிகளை ஒன்று சேர்த்து அறிஞர் அண்ணா கூட்டணி அமைத்தார், அதேபோல தேர்தல் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். ஓ.பன்னீர்செல்வம் மரியாதை நிமித்தமாக தான் முதலமைச்சரை சந்தித்து உள்ளார்.

ஒரு தலைவரை தரக்குறைவாக பேசக்கூடாது. பாவம் என்றெல்லாம் ஒபிஎஸ்சை செல்லக்கூடாது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு எப்படி கூட்டம் கூடுமோ அந்த அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி மக்கள் சந்திப்புக்கு கூட்டம் கூடுகிறது, சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே வெற்றி வாய்ப்புக்களை கூறுவது தவறு” என கூறினார்.

What do you think?

மதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம்

சீமாத்தம்மன் ஆலயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு