in

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 22 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 22 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

 

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று 22 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

அதன்படி இந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர் இணை ஆணையர் மண்டலம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று 22 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார்.

துணை மேயர் அஞ்சுகம் பூபதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . உதவி ஆணையர் கவிதா வரவேற்றார்.

விழாவில் வேத மந்திரங்கள் முழங்க இன்னிசை மேளத்துடன் 22 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இதில் ஒவ்வொரு ஜோடிக்கும் தலா 4 கிராம் மாங்கல்யம் மற்றும் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 81 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள் சத்யராஜ், மணிகண்டன், விக்னேஷ், ஆய்வாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

மருங்குளத்தில் எழுந்தருளி இருக்கும் ஆலயங்கள் கும்பாபிஷேகம் 

டான் போஸ்கோ பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கான அடைவுத் தேர்வு