in

மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக மணிவிழா.

மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக மணிவிழா.

 

தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக மணிவிழா நிலையத்தை உயர் நீதிமன்ற நீதி அரசர் சௌந்தர் மற்றும் தருமபுரம் ஆதீன 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திறந்து வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இந்த பள்ளியில், பள்ளியின் புரவலரும் தருமையாதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஆன சில ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் மணிவிழாவை முன்னிட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

உயர் நீதிமன்ற நீதி அரசர் சிவ.சௌந்தர், குரு மகா சன்னிதானம் முன்னிலையில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நீதிபதிகள் வழக்கறிஞர்கள், பள்ளி நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளின் யோகாசன நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான மாணவ மாணவிகள் பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

What do you think?

நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான அங்கூரம்

நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனிப்பெருந்தோ்த் திருவிழா கொடியேற்றம்