in

சேகரம் தூய திரித்துவ பேராலயத்தின் 200 வது ஆண்டு விழா

சேகரம் தூய திரித்துவ பேராலயத்தின் 200 வது ஆண்டு விழா

 

தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலம் பாளையங்கோட்டை சேகரம் தூய திரித்துவ பேராலயத்தின் 200 வது ஆண்டு ஆரம்ப விழா இன்று மாலை துவங்கியது.

ஜெர்மனி நாட்டில் இருந்து ஊழியம் செய்வதற்கு நெல்லைக்கு வந்த ரேணியஸ் ஐயர் காலத்தில் பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயம் கட்டி திறக்கப்பட்டது.

துவங்கப்பட்ட ஆராதனைக்கூடம் தற்போது வானளாவிய கோபுரத்தோடு அமைந்துள்ள தேவாலயம் ஊசி கோபுரம் என்றும் அழைக்கப்படும் இந்த பேராலயத்தின் இரு நூற்றாண்டு ஆரம்ப விழா இன்று மாலை கொண்டாடப்பட்டது.

நெல்லை திருமண்டலம் பேராயர் பர்ணபாஸ் ஜெபித்து விழாவை தொடங்கி வைத்தார் முன்னதாக ரேணியஸ் ஐயர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அங்கிருந்து பேராலயம் வரை பேரணி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வரலாற்று தூண் திறப்பும் புதிய குருமனை அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் உபதேசியர் வாரிய தலைவர் விஜிலா சத்யானந்த், மேயர் ராமகிருஷ்ணன் துணை மேயர் ராஜு மற்றும் முன்னாள் பேராயர் கிருத்துவ பெருமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

நெல்லை பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தொடர் கடையடைப்பு

துர்க்கை அம்மனுக்கு வெள்ளிகிழமை ராகு கால சிறப்பு அலங்கார ஆராதனை