in

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார்

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வரலட்சுமி சரத்குமார்

 

திருமணத்திற்கு பிறகும் சினிமா மற்றும் வெப் series… இல் பிஸியாக நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இவர் ஹாலிவுட் நடிகர் Jeremy Irons உடனினைந்து Rizana A Caged Bird என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்ப படத்தை இலங்கையை சேர்ந்த இயக்குனர் சந்திரன் ரத்தினம் இயக்குகிறார் இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்தின் சூட்டிங்…ங்கும் இலங்கையிலேயே நடத்தப்படுகிறது.

ரிசானா என்ற பெண் இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவிற்கு 2005 ஆம் ஆண்டு பணிப்பெண் வேலைக்கு செல்கிறார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் நான்கு மாத குழந்தை திடீரென்று இறக்கிறது கைது செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

அவரின் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த தண்டனை கடும் அதிர்வலியை ஏற்படுத்தியது குற்றம் சுமத்தப்பட்ட ரிஸானாவிற்கு அப்பொழுது வெறும் 17 வயதே இந்த கதை தான் படமாக வெளி வருகிறது.

இப்ப படத்தின் டைட்டில் விழா சமீபத்தில் நடைபெற்றது. இது குறித்து வரலட்சுமி பேசுதையில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஜெர்மியுடன் பணியாற்றுவது எனது கனவு என் கனவு நினைவாகிவிட்டது என்று கூறியுள்ளார்.

ரசிகர்களும் வரலட்சுமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

அயலி சீரியலில் entry கொடுக்கும் பிரபல நடிகர்

கூலி First Single Chikitu out