500 உடல் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார்.
வளசரவாக்கத்தில் உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது. இருவரிடம் 500 உடல் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்த போலீசார்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் போதைபொருள் விற்கப்படுவதாக வளசரவாக்கம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் சாலிகிராமம் பகுதியை சேர்ந்த சிதம்பரம் (30) மற்றும் ஐயப்பதாங்களை சேர்ந்த ஹரிஷ் (23) என்பதும் இவர்கள் இருவரும் வெளிமாநிலங்களில் இருந்து உடல் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து கோயம்பேடு, வளசரவாக்கம், பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இவர்களிடமிருந்த 500 உடல் வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


