பூட்டை உடைத்து ரொக்க பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
புவனகிரியில் நள்ளிரவில் ஆவின் பாலகத்தின் பூட்டை உடைத்து ரொக்க பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கடலூர் மாவட்டம் புவனகிரி ஆவின் பாலகத்தில் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை புவனகிரி பாலக்கரை அருகாமையில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகத்தில் நாள்தோறும் விறுவிறுப்பாக பால் டீ உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கடையின் விற்பனையை முடித்துக் கொண்டு கடையின் உரிமையாளர் கடையை பூட்டு போட்டு பூட்டி வீடு திரும்பிய நிலையில் இரவு நேரத்தில் கடையின் பின்புறம் போடப்பட்டிருந்த பூட்டை மர்ம நபர்கள் இரும்பு கம்பி கொண்டு நெம்பி உடைத்து கடையில் உள்ளிருந்த ரொக்க பணம் ரூபாய் 8 ஆயிரம் பணம் திருடியதாக கடையின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
புவனகிரியின் முக்கிய பிரதான இடமான பாலக்கரை பகுதியில் நடந்துள்ள திருட்டு சம்பவத்தால் பரபரப்பு காணப்படுகிறது.


