யோகா பயிற்சியின் போது உணவு பண்டம் சாப்பிட்டு பள்ளி மாணவர்கள் வாந்தி, மயக்கம்.
நெய்வேலி என்எல்சி பாரதி விளையாட்டு அரங்கத்தில் யோகா ரிகர்செல் நடைபெற்ற போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் என்.எல்.சி மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதி.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் பொதுத்துறை நிறுவனம் உள்ளது. இங்கே என்.எல்.சி ஜவகர், செயினட்பால், மகரிஷி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா தினத்தை முன்னிட்டு என்எல்சி பாரதி விளையாட்டு அரங்கில் யோகா பயிற்சி ரிகர்சல் செய்து வந்தனர்.
இந்த மாணவர்களுக்கு என்எல்சி நிறுவனம் சார்பில் உணவு பண்டங்கள் வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்டு மாணவர்கள் ரிகர்சல் முடிந்ததும் பள்ளிக்குச் சென்றனர். இந்த நிலையில் ஜவகர் பள்ளி மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பள்ளியில் மயங்கி விழுந்தனர்.

பின்னர் அவர்களை அங்கு இருந்த ஆசிரியர்கள் என்.எல்.சி ஆம்புலன்ஸ் மூலம் என்எல்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு மருத்துவர்கள் மாணவர்களுக்கு திவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
யோகா பயிற்சியின் போது உணவு பண்டம் சாப்பிட்டு பள்ளி மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


