செஞ்சி மாம்பழ சீசன் கம, கம மாம்பழ வாசனையால் விற்பனையும் களைகட்டியது
செஞ்சி பகுதியில் மாம்பழ சீசன் தொடங்கியது. கம,கம மாம்பழ வாசனையால் விற்பனையும் களைகட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி….
செஞ்சி பகுதியில் மாம்பழ சீசன் தொடங்கி விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் ஏராளமான மாந்தோப்புகள் உள்ளன அவைகளில் விளையும் மாம்பழங்கள் ருசியானவை.
முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் போற்றப்படும் மாம்பழம் சீசன் களைகட்டத் தொடங்கி உள்ளது.
கோடை என்றாலே வெயில் சுட்டெரிக்குமே என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், தித்திக்கும் மாம்பழம் கிடைக்குமே என்ற மகிழ்ச்சிதான் மாம்பழ பிரியர்களுக்கு உண்டு.
மாம்பழம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சேலம்தான்.ஆம், சேலத்து மாம்பழம்தான் விளைச்சலுக்கும், ருசிக்கும் பெயர்போனது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சமீப காலமாக செஞ்சி மாம்பழமும் இருக்கிறது.
இந்நிலையில் செஞ்சி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஊரணித்தாங்கலிலிருந்து நாட்டார் மங்கலம் வரை ஏராளமான மாம்பழம் மற்றும் பலாப்பழ கடைகள் சாலையோரம் கீற்றுக் கொட்டகைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இவ்விடங்களில் ருசியான மாம்பழங்கள் கிடைக்கும் என்பதால் திருவண்ணாமலை, செஞ்சி போன்ற பகுதியில் இருந்து சென்னை,புதுவை மற்றும் புதுவை பகுதியிலிருந்து பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு காரில் செல்பவர்கள் காரை நிறுத்தி மாம்பழங்களை வாங்கி சொல்கின்றனர்.
இந்த சாலையோர உள்ள கடைகளில் பல வகையான மாம்பழங்கள்,மற்றும் பலாப்பழங்கள் கிடைக்கின்றன. அவைகளில் இமாம் பசால் கிலோ ரூபாய் 200க்கும், மனோரஞ்சிதா 160 க்கும் , அல்போன்சா, காலாப்பாடி ஆகியவை 120 ரூபாய்க்கும், ஓட்டு 100 ரூபாய்க்கும், பங்கன பள்ளி 140 ரூபாய்க்கும், செந்தூரா 100 ரூபாய்க்கும், விலை விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெஞ்சல் புயலால் ஒரே நாளில் கொட்டி தீர்த்த மழையில் மாவிலைச்சல் பாதிக்கப்பட்டு.
மாமரத்தில் பூக்கள் எடுக்காமல் காய்கள் குறைவாகவே கிடைத்ததால்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாம்பழ அறுவடை குறைவாக உள்ளதால் மூன்று மாதத்துக்குள்ளையே மாம்பழ சீசன் முடிந்து விடும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


