மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்ட அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மக்கள் விரோத,தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், காலி பணியிடங்களை நிரப்பிடவும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காண்ட்ராக்ட் ஒப்பந்தம் முறையை ஒழித்திடவும்,குறைந்தபட்ச ஊதியம் மாதம் 26,000 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டி உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எல் பி எஃப் தொழிற்சங்கம், ஏ ஐ டி யு சி தொழிற்சங்கம், ஐ என் டி யு சி தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
எல் பி எப் தொழிற்சங்கத்தின் தலைவர் பொன் நக்கீரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.


