தருமை ஆதினம் 27-வது குருமகா சன்னிதானம் மீது பொய் பிரச்சாரம்
தருமை ஆதினம் 27-வது குருமகா சன்னிதானம் மீது பொய் பிரச்சாரம் செய்யும் வழக்கறிஞர் ஷங்கமித்ரனின் பொய் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து இந்து சமுதாய கூட்டமைப்பு சார்பாக மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் யிடம் அனைத்து இந்து கூட்டமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் நாஞ்சில் பாலு தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்.
தருமை ஆதினம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் மீது வழக்கறிஞர் ஷங்கமித்ரன் பொது வெளியிலும்.
சமூக வலைதளத்திலும் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். தருமை ஆதினம் அவர்கள் பட்டம் ஏற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் 500 கோயில்களில் கும்பாபிசேகம் செய்து உள்ளார்.
மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டவும்.புதிய பேருந்து நிலையம் கட்டவும் இடம் வழங்கியவர். அவர் மீது பொய் பிரச்சாரம் செய்யும் வழக்கறிஞர் ஷங்கமித்ரனின் பொய் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமாய் மனு அளித்தனர்.
அப்போது பா.ஜ.க வின் மாவட்ட பொருப்பாளர்கள் வேளாளர் சங்க பொருப்பாளர்கள் 30 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


