தேனி நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர்மன்ற கூட்டத்தில் காரசார விவாதம்
தேனி நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர நகர்மன்ற கூட்டத்தில் காரசார விவாதம் – கூட்டத்தில் கலந்து கொண்ட தவெக எம்எல்ஏ உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நகர் மன்ற தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்கள்.
எங்களுடைய கூட்டத்தில் பேசுவதற்கு எம்எல்ஏ-விற்கு உரிமை இல்லை எனக் கூறியதால் எம் எல் ஏ கூட்டத்திலிருந்து வெளியேற்றம்.
தேனி – அல்லிநகரம் நகராட்சியில் இன்று மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது, நகர் மன்ற தலைவர் ரேணுகா பிரியா பாலமுருகன், நகர் மன்ற துணை தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் சிறப்பு விருந்தினராக இந்த கூட்டத்தில் பங்கேற்றார், இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து விவாதம் நடைபெற்றது.
அப்போது கடந்த ஐந்தாண்டு காலத்தில் தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எந்தவித அடிப்படை பணிகளும் மேற்கொள்ளவில்லை என எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் தெரிவித்து இருந்தார்.

இதனால் நகர் மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் அதிருப்தி அடைந்து, எம்எல்ஏ-வின் குற்றச்சாட்டுக்கு பதில் தெரிவித்து கடந்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் நடைபெற்றது என்பது உங்களுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பினர்.
மேலும் இது நகர் மன்றத்திற்கான கூட்டம் உங்களுக்கு இங்க பேச உரிமை இல்லை என நகர் மன்ற துணைத் தலைவர் செல்வம் தெரிவித்ததால் எம்எல்ஏ சபரி ஐங்கரனின் ஆதரவாளர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு வணக்கம் வைத்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார் இதனால் நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


