மத்திய அரசுக்கு இறுதி மணி அடிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் – அமைச்சர் தங்கம் தென்னரசு
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார்.
நெல்லை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாங்குநேரி மற்றும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் வள்ளியூரில் நடந்தது. கூட்டத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலு, அகில இந்திய செயலாளர் வல்லப பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயலாற்றி வெற்றியை பெற வேண்டும் என்றுஆலோசனை வழங்கினர்.
மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரே ஒரு திட்டம் தான் கொண்டு வந்தது. அது மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை. ஆனால் அந்த திட்டம் வந்ததா? வரவில்லை. ஆனால் வந்தது ஒரே ஒரு செங்கல் மட்டும்தான் வந்தது.
கச்சத்தீவு குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத மத்திய அரசு தற்போது தேர்தல் நேரத்தில்தான் கச்சத்தீவை குறித்து பேசி வருகிறது.
நம்மை வஞ்சிக்கிற அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு தமிழகத்துக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர வேண்டி உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.
தமிழக அரசு சார்பில் வெள்ள நிவாரணமாக 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க கோரிக்கை விடுத்தும் ஒரு சல்லிக்க காசு கூட கொடுக்கவில்லை.
மத்திய அரசுக்கு இறுதி மணி அடிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே நாட்டின் பெயர், ஒரே அரசாட்சி என்று எல்லாம் ஒரே கலாச்சாரத்தில் திகழ விரும்புகிறார்கள்.