வடகிழக்கு பருவமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 5000 கன அடி தண்ணீர் திறப்பு…
வடகிழக்கு பருவமழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறப்பு…
தென்பெணணை ஆற்றின் கரையோர உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சியில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சி காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது, சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 7321 மில்லியன் கன அடியாகும். சாத்தனூர் அணை நீர்மட்டம் தற்போது 113.20 அடியாவும் உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சாத்தனூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அரூர், ஊத்தங்கரை, கல்லாறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் வினாடிக்கு 5000 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், தங்களது குழந்தைகளை ஆற்றில் இறங்கி விளையாட அனுமதிக்க வேண்டாம் என நீர்வளத்துறை சார்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் சாத்தனூர் அணையில் இருந்து திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் தற்போது அணையில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 5000 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


