in

500 ஆண்டுகள் பழமையான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா

500 ஆண்டுகள் பழமையான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா

 

வத்தலக்குண்டில் 500 ஆண்டுகள் பழமையான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற சாமி தரிசனம் செய்தனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தெற்கு தெரு பகுதியில் ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ மாரியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலில் 500 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் முன்னோர்கள் நட்டு வைத்த அரிவாள்களை காவல் கருப்பண்ணசாமியாக இப்பகுதி பொது மக்கள் பழமை மாறாமல் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோவில்களுக்கு புதிய கோபுரங்கள் கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ லட்சுமி விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் புதிதாக நிறுவப்பட்டது.

பின்னர் மூன்று நாட்கள் நடைபெற்ற யாக வேள்வி பூஜைகளை தொடர்ந்து குடமுழுக்கு நாளான இன்று புனித நீர் குடம் எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

பந்தல்குடி கால்வாய் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை

ஆட்டோவில் வந்த  பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்