in

3000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்பு

3000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்பு

 

சிதம்பரம் அருகே எறும்பூர் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் போடப்பட்ட 3000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்பு.

நெல்மணிகளை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நெல் கொள்முதல் ஈரப்பதத்தை உயர்த்த கோரிக்கை.

சிதம்பரம் அருகே எறும்பூர் பகுதியில் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையம் மூலம் எறும்பூர், நெல்லி கொள்ளை, குறிஞ்சி கொள்ளை, மதுவானை மேடு, சின்ன நற்குணம், வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்ய பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் நிலையில் கடந்த மூன்று தினங்களாக மாலை வேலைகளில் பெய்யும் மழை காரணமாக நெல்மணிகள் நனைந்து முளைத்து வருகிறது.

சுமார் 3000 மூட்டைகள் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளதால் நெல் மூட்டையில் இருந்து நெற்களை பிரித்து காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

What do you think?

படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேக அஷ்டபந்தன அபிஷேகம்

ஸ்ரீ அழகிய நாத சுவாமி திருக்கோவில் கோவில் கும்பாபிஷேம்