in

ஏரிக்கரை ஸ்ரீ புத்துமாரியம்மனுக்கு 27-ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா

ஏரிக்கரை ஸ்ரீ புத்துமாரியம்மனுக்கு 27-ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா

 

திண்டிவனம் தீர்த்தகுளம் ஏரிக்கரை ஸ்ரீ புத்துமாரியம்மனுக்கு 27-ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்தகுளம் ஏரிக்கரையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ புத்துமாரியம்மனுக்கு 27-ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு ஏரிக்கரையில் அமைந்துள்ள ஆதிசக்தி முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து நேற்று மாலை பூங்கரகம் ஜோடித்து சக்தி கரகம் அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவர் மற்றும் மூலவர் ஸ்ரீ புத்துமாரியம்மன் க்கு காப்பு கட்டும் நிகழ்வும், மற்றும் காப்பு கட்டும் நிகழும் நடைபெற்றது.

மேலும் வண்ணமலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ புத்துமாரி அம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு கோயிலை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.

வருகின்ற சனிக்கிழமை 24-05-2025 அம்மனுக்கு திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய நிர்வாகிகள் மற்றும் ஏரிகோடி தெரு மற்றும் தீர்த்த குளம் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

What do you think?

மகாராஷ்டிரா ஆளுநர் மற்றும் தமிழக பிஜேபி தலைவர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் சாமி தரிசனம்…

பறவைகளுக்காக ஸ்கூட்டியை தொடாமல் பேருந்தில் பயணித்து வரும் இளைஞர்