21 அடி உயரத்தில் சக்திவிநாயகர் சிலை பிரதிஷ்டை
செஞ்சி சிறுகடம்பூரில் 21 அடி உயரத்தில் சக்திவிநாயகர் சிலை பிரதிஷ்டை- சமபந்தி நிகழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி விழா கோலாக்காலம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூரில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீசக்தி விநாயகர் ஆலயத்தில் 35 – ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 21 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு காலை ஸ்ரீசக்தி விநாயகருக்கு பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக்கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 21 அடி உயரத்தில் உருவாகியிருக்கும் விநாயகருக்கு மஹா கணபதி ஹோமமும், சிறப்பு யாகம், பூஜைகள், மஹா தீபாரதனை நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான, திருக்குறள் போட்டி,பேச்சு போட்டி,ஓட்ட பந்தயம்,பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு சமபந்தி அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
மூலவர் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரமும், மஹா தீபாரதனையும், நடைபெற்று இரவு மேள தாளங்கள் முழங்க பலவகை வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட சக்தி விநாயகர் வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவில் பிஜேபி கட்சியின் மாநில தொழில் பிரிவு செயலாளர் தொழிலதிபர் வி.பி என்.கோபிநாத், விழுப்புரம் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் வி.ஆர். பிருத்திவிராஜ், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபாடு செய்தனர்.
இந்த விழா ஏற்பாடுகளை செஞ்சி சிறுகடம்பூர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


