in

தேனியில் ஸ்ரீ பெருமிழலை குடும்பா நாயனாருக்கு 1160 ஆம் ஆண்டு வழிபாட்டு பூஜை

தேனியில் ஸ்ரீ பெருமிழலை குடும்பா நாயனாருக்கு 1160 ஆம் ஆண்டு வழிபாட்டு பூஜை

 

தேனியில் ஸ்ரீ பெருமிழலை குடும்பா நாயனாருக்கு 1160 ஆம் ஆண்டு வழிபாட்டு பூஜை நடைபெற்றது

தேனி பங்களா மேட்டில் மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில் வளாகத்தில் 63 நாயன்மார்கள் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த 63 நாயன்மார்களில் ஸ்ரீ பெருமிழலை குடும்பா நாயனாருக்கு 1160 ஆம் ஆண்டு வழிபாட்டு பூஜை பூஜை நடைபெற்றது.

முதலில் பால், தயிர், தேன், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

இந்த சிறப்பு பூஜையினை முன்னிட்டு மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை தேனி மாவட்ட குரும்ப கவுண்டர் இன மக்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து அருள் பெற்று சென்றனர்.

What do you think?

Live Roulette Online USA: Every Little Thing You Need to Know

கவின் உடலுக்கு அமைச்சர் கே என் நேரு நேரில் அஞ்சலி