முட்டியூரில் ஸ்ரீ பண்டரிநாதர் 113 வது ஆண்டு பஜனை மகோற்சவ விழா
திண்டிவனம் அடுத்த முட்டியூரில் ஸ்ரீ பண்டரிநாதர் 113 வது ஆண்டு பஜனை மகோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த முட்டியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பண்டரிநாதர் 113 ஆவது ஆண்டு பஜனை மகோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காலை 7:00 மணிக்கு அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகயாய் விளங்கும் எம்பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு சுவாமி பிரபந்த கோஷ்டிகளோடு வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.

இந்நிகழ்ச்சிக்காண ஏற்பாட்டினை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

