சொக்கநாதபுரம் அருள்மிகு உக்ர பிரத்யங்கிரா தேவி திருக்கோவிலில் 108 கலச அபிஷேகம்
சொக்கநாதபுரம் அருள்மிகு உக்ர பிரத்யங்கிரா தேவி திருக்கோவிலில் 108 கலச அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் வழிபாடு
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ உக்ர பிரத்யங்கிரா தேவி திருக்கோவிலில் ஆனி மாதத்தை முன்னிட்டு 108 கலசாபிஷேகம் வைபவம் நடைபெற்றது.
இக்கோவிலில் ஶ்ரீ உச்சிஷ்ட கணபதி ஸ்ரீ பிரித்திங்கரா தேவி அருள்பாலித்து வருகின்றனர் இவ்விழா மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது விழா நிறைவாக 108 கலசாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாகஅம்மன் சன்னதி முன்பு அலங்கரிக்கப்பட்ட மேடையில் 108 கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு மாவிலை தேங்காய் வைத்து அலங்கரித்தனர் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் ஹோமங்கள் நடத்தி உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.
இதனையடுத்து மூலவர் பிரித்திங்கரா தேவி அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க 108 கலசங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
நிறைவாக சிறப்பு அலங்காரம் செய்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரித்திங்கரா தேவி அம்மனை வழிபட்டனர்.