in

பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் அரசு மதுபான கடைகளை மூட வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்

பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படும் அரசு மதுபான கடைகளை மூட வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் இரண்டு அரசு மதுபான கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழக சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஜெயமங்களம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் மது அருந்த வரும் மது பிரியர்களால் அடிக்கடி பிரச்சினைகள் மற்றும் மோதல்கள் உருவாகி வருகிறது

   

மேலும் பிரதான சாலையில் அரசு மதுபான பார் செயல்பட்டு வருவதால் சாலையில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் அந்த வழியை செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மது பிரியர்களால் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தும் மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர்

மேலும் கள்ளச் சந்தையிலும் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

What do you think?

12 வயது சிறுவன் அபாயகரமாக படகு ஓட்டும் வீடியோ வைரல்

தனியார் மருத்துவமனைக்கு நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து