in

நெய்வேலியில் பஸ்சில் கடத்திவரப்பட்ட சுமார் 21 கிலோ கஞ்சா மூட்டையை பறிமுதல் செய்த காவல்துறையினர்

நெய்வேலியில் பஸ்சில் கடத்திவரப்பட்ட சுமார் 21 கிலோ கஞ்சா மூட்டையை பறிமுதல் செய்த காவல்துறையினர்

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நெய்வேலி துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காவல் ஆய்வாளர் வீரமணி உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன் மற்றும் தவச்செல்வன் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பஸ்ஸில் சுமார் 21 கிலோ எடை கொண்ட கஞ்சா மூட்டையை எடுத்து வந்த பெண் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஒரிசா மாநிலத்தைச் சோனேபூர் மாவட்டத்தை சேர்ந்த அபிலாஷ் குரு (28), சிபிதுல்லா, அலிசா(24) ,தர்பா மற்றும் நெய்வேலி பகுதியை சேர்ந்த குட்டி தேவா(24) சுதாகர்(27)
என்ன தெரிய வந்தது

பின்னர் அவர்களிடமிருந்து மூன்று செல்போன்கள் மற்றும் 21 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பஸ்ஸில் கஞ்சா வை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற பெண் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள 142 அடி உயர ராஜ கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்த தீட்சிதர்கள்

77வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்