பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் | Britain Tamil Europe News
பிரிட்டனில் வரியை குறைக்க முடிவு
பிரிட்டனில் அடுத்த வாரம் வசந்தகால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெறிமி ஹன்ட் தாக்கல் செய்கிறார். அப்போது வரி குறைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல வர்த்தக வரியும் குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது
பொறுப்பற்ற அழைப்புகளால் தாய்மார்கள் கவலை
பிரிட்டனில் கருக்கலைப்பை எதிர்கொள்ளும் பெண்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனையில் கருகலைப்பு செய்யும் போது அவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு தேதியை கொடுத்து அந்த நாளில் கருவில் சிசு உருவானதற்கான சூழல் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் சொல்லி அனுப்புகின்றன. மேலும் அந்த தேதியில் சம்பந்தப்பட்ட பெண்களை தொடர்பு கொண்டு ஸ்கேன் செய்ய வருமாறு அழைப்பு விடுக்கின்றனர்.
இது தங்களுக்கு மனதளவில் மேலும் உலைச்சலை ஏற்படுத்துவதாக பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
முதியவரை கொலை செய்த இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை
இங்கிலாந்தில் டெர்பி பேருந்து நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி 82 வயது மதிக்கப்பட்ட முன்னாள் ஒருவரை உமர் என்ற 16 வயது இளைஞர் முகத்தில் குத்தி கொலை செய்தார். எனவே அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற விசாரணையில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிற தண்டனை விதிக்கப்பட்டது
இங்கிலாந்தில் கார் பார்க்கிங்கில் நூதன மோசடி
இங்கிலாந்து தோர்நபி மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கையில் ஒரு பெண் தனது வாகனத்தை பார்க் செய்தார். அப்போது அங்கு இருந்த கியூ ஆர் கோடை பயன்படுத்தி அவர் கார் பார்க்கிங் செய்வதற்கான கட்டணத்தை செலுத்தினார்.
ஆனால் ஏற்கனவே சில மர்ம நபர்கள் தங்களது கியூ ஆர் கோடை அங்கு பொருத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அந்தப் பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 13,000 பவுண்டு வரை அந்த நபர்கள் உடனடியாக கரந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் இது குறித்து உள்ளூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
வெஸ்ட் லண்டனில் சீக்கிய இளைஞர் கொலை
வெஸ்ட் லண்டனில் வசித்து வந்தவர் சிம்ரஜித் சிங். இவருக்கு வயது 17. இந்தியரான இவரை கடந்த புதன்கிழமை நான்கு பேர் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
அவரை கொலை செய்த அதே சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த அமந்திப் சிங், மஞ்சித் சிங், அஜ்மீர் சிங், பூரான் சிங் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரான்சில் போதை பொருள் பயன்படுத்திய எம்பியிடம் விசாரணை
பிரான்ஸ் எம்பி ஜோயல் சமீபத்தில் தனது வீட்டில் வைத்து சட்டத்துக்கு புறம்பாக போதைப்பொருள் உட்கொண்டதாக தெரிகிறது. அப்போது அவர் கையும் களவுமாக சிக்கினார். மருத்துவ பரிசோதனையிலும் அவர் போதை பொருள் உட்கொண்டது உறுதியானது.
இந்த சூழ்நிலையில் போதை பொருள் அவருக்கு எப்படி கிடைத்தது அல்ல பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது.
ஸ்பெயினில் பெட்ரோ சான்செஸ் மீண்டும் பிரதமராக தேர்வு
ஸ்பெயின் பொதுத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் பிரதமர்
பெட்ரோ சாஞ்செஸ் மீண்டும் மகத்தான ஆதரவுடன் தேர்வாகியுள்ளார். மொத்தம் உள்ள 350 தொகுதிகளில் அவர் நான்கில் மூன்று பங்கு இடங்களில் வெற்றி வாகை சூடினார். எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் பாப்புலர் கட்சி ஆட்சி அமைக்க தவறியது.