in

100 நாள் வேலை திட்டத்திற்கு செல்லும் பெண்களால் தமிழ்நாட்டில் வட மாநில இளைஞர்கள் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

100 நாள் வேலை திட்டத்திற்கு செல்லும் பெண்களால் தமிழ்நாட்டில் வட மாநில இளைஞர்கள் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் அதன் சுற்றுவட்ட கிராமங்களான 300 மங்களம்,அமர்நாதபுதூர்,உடைந்தமடை, முத்தனூர் வட மாநில இளைஞர்கள் நெல் நாற்று நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கல்கத்தாவை சேர்ந்த வட மாநில இளைஞர்கள் கடந்த சில தினங்களாக நூற்றிற்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் இப்பகுதியில் தங்கி ஒரு ஏக்கராவிற்கு 11 நபர்கள் வீதம் ரூபாய் 5500 நடவு கூலியாக பெற்றுக்கொண்டு நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் பெண்கள் ஈடுபடுவதால் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தற்போது வட மாநில இளைஞர்கள் நூற்றிற்கும் மேற்பட்டோர் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வட மாநில இளைஞர்களை நடவு பணியில் ஈடுபடுத்துவதால் விவசாயம் செலவினத்தை குறைவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

What do you think?

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது.

அரசு பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலைகட்டிய மாணவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்