in

மது போதையில் கடை வியாபாரிகள், பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி அட்ராசிட்டி செய்த இளைஞர்கள்

மது போதையில் கடை வியாபாரிகள், பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி அட்ராசிட்டி செய்த இளைஞர்கள்

இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு சிறார்கள் தப்பியோட்டம்

*போலீசாரிடம் புகார் தெரிவித்த பொதுமக்களை இளைஞர்கள் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த காணொளி வைரலாக பரவி வருகிறது*

தேனி நகரில் மையப் பகுதியான பகவதி அம்மன் கோயில் தெரு பகுதியில் ஏராளமான ஜவுளிக்கடை, பள்ளி உள்ளிட்டவை அமைந்திருக்கும் இப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாகும்.

இங்கு மது போதையில் இருந்த நான்கு இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் தகராறில் ஈடுபட்டும் பள்ளி மாணவிகள் பின்னே சென்று ஆபாசமாக பேசி இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தபோது இரண்டு இளைஞர்கள் தப்பியோடிய நிலையில் இரண்டு இளைஞர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அரண்மனைபுதூர் பகுதியை சேர்ந்த பரஞ்சோதி(21), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்றும் மேலும் தப்பியோடிய இரண்டு சிறார்கள் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றும் தெரியவந்தது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டனர்.

இளைஞர்கள் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்த பொது மக்களை இளைஞர்கள் மிரட்டல் விடுத்த சம்பவத்தின் காணொளி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பெரும்பாலான ஜவுளிக் கடைகள், பள்ளிகள் மற்றும் பல்வேறு கடைகள் செயல்படும் இப்பகுதியில் மது போதையில் இளைஞர்கள் தொடர்புக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் இப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயின் பிறந்தநாள் விழா 

வர்றாரு ‘கர’ தனுஷ்! ‘போர் தொழில்’ டைரக்டருடன் கூட்டணி.. சம்மர் ரிலீஸ் கன்பார்ம்!