மக்களுக்கு நல்லது செய்ய அதிகாரம் அவசியமில்லை – நடிகர் சிவராஜ்குமார்
கன்னட திரையுலகத்தோட டாப் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்புல இப்போ ’45 தி மூவி’ உருவாகியிருக்கு.
யாரெல்லாம் இருக்காங்க? இந்தப் படத்துல உபேந்திரா, ராஜ் பி செட்டி-னு பெரிய பட்டாளமே நடிச்சிருக்காங்க. அர்ஜுன் ஜன்யா இதை இயக்கியிருக்காரு.
ரிலீஸ் எப்போ? பேண்டசி கலந்த இந்தப் படம் வர்ற கிறிஸ்துமஸ் விருந்தா டிசம்பர் 25-ஆம் தேதி தியேட்டருக்கு வருது.
படத்தோட புரமோஷன் வேலையில சிவராஜ்குமார் பிஸியா இருந்தப்போ, ஒரு நிருபர் அவர்கிட்ட ஒரு சூடான கேள்வியைக் கேட்டாரு: கேள்வி: “தமிழ்நாட்டுல எம்.ஜி.ஆர் காலத்துல இருந்து இப்போ விஜய் வரைக்கும் எல்லாரும் அரசியலுக்கு வர்றாங்க.
ஆனா கர்நாடகால ராஜ்குமார் சார், உபேந்திரா சார், அப்புறம் நீங்கனு யாருமே அரசியலுக்கு வராம இருக்கீங்களே… என்ன காரணம்?” அதற்கு சிவராஜ்குமார் ரொம்ப வெளிப்படையா, நச்சுன்னு ஒரு பதில் சொன்னாரு: “மக்களுக்கு நல்லது செய்ய அதிகாரம் அவசியமில்லை”: “மக்களுக்கு ஒரு விஷயம் பண்ணனும்னா, அதுக்கு நடிகர்களுக்கு ஒரு பதவி இல்ல அதிகாரம் வேணும்னு எந்த அவசியமும் இல்லை.”
“ஒரு நடிகரா இருந்துகிட்டே மக்களுக்கு எவ்வளவோ நல்லது பண்ணலாம்.
அப்படி இருக்கும்போது ஏன் கண்டிப்பா அரசியலுக்கு வரணும்னு கேக்குறீங்க?”-னு ரொம்ப சிம்பிளா கேட்டுட்டாரு.
அரசியல் ஆசை இல்லாம, மக்களுக்காகப் பணி செய்யத் தயாரா இருக்குற அவரோட இந்த மனசைப் பார்த்துட்டு ரசிகர்கள் “இதுதான் சிவண்ணா ஸ்டைல்“னு கொண்டாடிட்டு வர்றாங்க.


